மத்திய அரசு கடந்த வருடம் டிசம்பர் மாதம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது மோதல் உருவானது. இது டில்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையாக மாறியது. இக்கலவரத்தில் உளவுத்துறை போலீஸ் அதிகாரி அங்கித் சர்மா, உட்பட 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் டில்லி போலீசார், கலவரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 719 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவற்றில் 55 வழக்குகள் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டு, 60பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.