16 மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூட உத்தரவு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூட முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகளில் மற்றும் தூய்மை பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, போலீசார், போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.